EPS Speech in Tirchy

மழையை பொருட்படுத்தாமல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளார்.

EPS Speech in Tirchy : தமிழகத்தில்தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரானா வைரஸ் பரவலால் 2020 உலகநாடுகள் அனைத்திற்கும் பெரும் சறுக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவே இருந்து வந்தது.

ஆனால் தமிழகம் இந்த பேரிடர் காலத்தில் சிறப்பான நலத்திட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது. உலக முதலீட்டாளர்களை இதில் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியையும் பொருளாதாரத்தையும் பெருகி வரும் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

இவர் 2021 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதத்திற்குள் குறைவாகவே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன‌.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தொடர்ந்து தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறார். எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிக் கொண்டு திரியாமல் இதுவரை அசத்தலான திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பேசி ஓட்டுகளை பெற்று வருகிறார்.

வெற்றிநடை போடும் தமிழகம் என்ற பெயரில்அதிமுக அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்து வருகிறார். மேலும் ஒவ்வொரு மாவட்டமாக ஒவ்வொரு ஊராகச் சென்று மக்களோடு மக்களாக களத்தில் இறங்கி அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

இப்படியான நிலையில் இன்று திருச்சி மரவனூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது மழையையும் பொருட்படுத்தாமல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து மக்களிடையே பேசியுள்ளார்.

அதிமுகவில் என்னைப் போன்ற சாமானிய தொண்டன் கூட முதல்வராகலாம் என பெருமையாக பேசியுள்ளார்.

மேலும் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு அதிமுக ஆட்சி செய்த நல திட்டங்கள் குறித்து பேசினார்.

திருச்சியில் செயல்பட்டு வரும் டிஎன்பிசி ஆலை ரூபாய் 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் பேசியுள்ளார்.

முக்கொம்பு கதவணை திட்டப் பணிகள் இன்னும் மூன்று மாதத்திற்குள் நிறைவு பெறும். வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுகவின் கோட்டையாக இருக்க வேண்டும் எனவும் பேசியுள்ளார்.