திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பல முதலமைச்சர்கள் இருப்பார்கள் சோழிங்கநல்லூரில் முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.

EPS Speech in Sholinganallur : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. முதல்வர் பழனிசாமி அதிமுக மற்றும் தங்களது கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மாவட்டம் மாவட்டமாக சென்று பிரச்சாரம் செய்து வந்த முதல்வர் பழனிசாமி கடந்த சில தினங்களாக சென்னையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் சோழிங்கநல்லூரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, தயாநிதி என பல முதலமைச்சர்கள் இருப்பார்கள், நாடு தாங்காது என பேசியுள்ளா‌ர்.