EPS Speech in Ranipet District

இன்னும் பத்து முதல் பதினைந்து நாட்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி ரசீது வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்

EPS Speech in Ranipet District : தமிழகத்தில் புரட்சி தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களின் வழியில் ஆட்சி செய்து கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்தி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழக மக்களுக்காக தொடர்ந்து பல்வேறு அதிரடியான திட்டங்களை அறிவித்து மக்களை மகிழ்ச்சியாக்கி வருகிறார்.

அந்த வகையில் பயிற்கடன் தள்ளுபடிக்காக ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டு விட்டது.

இதனைத் தொடர்ந்து இன்னும் 10-15 நாட்களில் கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கப்படும் என ராணிப்பேட்டை மாவட்டம் கைனூரில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்தார்.

வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் ரத்தத்தை வியர்வையாக்கி உழைக்கும் 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்து அவர்களின் வயிற்றில் பால் வார்த்த அரசு அம்மாவின் வழியில் வந்த அதிமுக அரசு என பேசியுள்ளார்.

தமிழகத்திலேயே அதிமுக அரசு தான் இரண்டாவது முறையாக பயிர் கடனை தள்ளுபடி செய்துள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.