YouTube video

EPS Speech in MGR Birthday Function : தமிழக அரசியலில் பெரும் புரட்சியை செய்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாள் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி கொண்டாடப்பட்டது.

இதே விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கலந்துகொண்டு பேசிய போது நாமெல்லாம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித் தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களின் வாரிசுகள்.

கட்சித் தலைவர்கள் அனைவருமே அவர்களின் வாரிசுகளை வளர்ப்பதில் தான் குறியாக இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் தொண்டர்களை வாரிசுகளாக வளர்க்கும் ஒரே கட்சி அதிமுக தான் என பேசியுள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இதுவரை 566 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அவைகளில் 273 அறிவிப்புகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன என பேசினார்.

மற்ற அறிவிப்புகளுக்கான திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு அறிவிப்புகள் மட்டும் ஆய்வு பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி இதயதெய்வம் ஜெயலலிதா ஆகியோரின் கனவுகளை சிந்தாமல் சிதறாமல் நிறைவேற்றும் அரசு அதிமுக என தெரிவித்தார்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பெருமைகளை நினைவு கூரும் வகையில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித் தலைவரின் பெயர் பிரதமரால் சூட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் 20 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தது சரித்திரம் படைத்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என புகழாரம் சூட்டியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேரளாவை பாருங்கள் டெல்லியை பாருங்கள் கொரானாவை கட்டுக்குள் வைத்துள்ளது என பேசினார். தமிழக அரசு இதை செய்யத் தவறி விட்டது எனவும் குற்றம்சட்டி வந்தார்.

இப்போது கேரளா அரசை பாருங்கள், டெல்லி அரசை பாருங்கள் தமிழக அரசையும் பாருங்கள். கொரானாவை கட்டுப்படுத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்ட அரசு தமிழக அரசு.

இன்று இந்தியாவிலேயே கொரினாவை கட்டுப்படுத்திய மாநிலமாக தமிழக அரசு விளங்குகிறது என பேசினார். தமிழகத்தில் ஒரு கோடியே 62 லட்சம் மக்களுக்கு கொரானா பரிசோதனை செய்யப் பட்டதாகவும் தெரிவித்தார்.

இதுவரை தமிழகம் முழுவதும் 93 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு இருப்பதாக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார். இதன் மூலம் 45 லட்சம் பேருக்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கரோனா வைரஸ் பேரிடர் காலத்தில் அம்மா உணவகத்தில் 4 மாதம் இலவச உணவு அளித்த ஒரே அரசு அம்மாவின் அரசு என தெரிவித்துள்ளார். அதேபோல் 8 மாத காலத்திற்கு ரேஷன் கடைகளில் இலவச பொருட்கள் வழங்கிய அரசும் அம்மாவின் அரசு என தெரிவித்துள்ளார்.

அதேபோல் இதே பேரிடர் காலத்தில் 20 கிலோ வழங்கப்பட்டு வந்த அரிசி 40 கிலோ என இரண்டு மடங்காகவும் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார். இவைகள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

EPS Speech in MGR Birthday Function

தமிழகத்தில் 2000 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். சென்னையில் ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களாக தேர்வு செய்து இந்த மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவையெல்லாம் திமுக ஆட்சியில் கிடைத்ததா?? ஏழை மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் அதிமுக அரசு இவை அனைத்தையும் செயல்பட்டுக் கொண்டு வந்திருப்பதாக பேசினார்.

ஏரி குளங்களை தூர்வாரி தினம்தோறும் குடிநீர் கிடைக்கும் வகையில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் மழை நீரைத் தேக்கி வைத்து உள்ளோம் எனவும் பேசினார். கழிவு நீரை சுத்தப்படுத்தி தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் திட்டத்தையும் அதிமுக அரசு தான் கொண்டு வந்தது என்பதையும் ஸ்டாலின் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என பேசினார்.

நெரிசல் மிகுந்த மாநகராட்சியான சென்னையில் நெரிசலை குறைப்பதற்காக பல்வேறு இடங்களில் புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன என தெரிவித்தார். 954 கிலோ மீட்டர் மழைநீர் கால்வாய்களை சீரமைத்து இருப்பதாகவும் தெரிவித்தார். அம்மாவின் அரசு கிடைத்த நடவடிக்கைகளின் காரணமாக பல்வேறு சாலைகளில் தேங்கிய நீர் அப்புறப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நிலங்களைப் பாதுகாக்க உரிமையாளர்களுக்கு ஏதுவாக நில அபகரிப்பு திட்டம் அதிமுக அரசால் கொண்டு வரப்பட்டது என தெரிவித்துள்ளார்.

சென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசு இதுவரை செய்த பல்வேறு சாதனை திட்டங்கள் குறித்தும் பேசினார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.