கோயம்புத்தூரில் மாஸ் காட்டிய முதல்வர்! - திருவிழா போல கூடிய பொதுமக்கள் | ADMK | Edappadi Palaniswami

CM EPS Speech in Coimbatore : தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று மக்களோடு மக்களாக களத்தில் இறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தான் முதல்வராக பதவியேற்ற பின் நான்காண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக அதிமுக கொண்டு வந்த திட்டங்கள், மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து பேசி வாக்கு சேகரித்து வருகிறார்.

அதேசமயம் அதிமுக பற்றி திமுக முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளுக்கும் தொடர்ந்து தரமான பதிலடி கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் இன்று கோயம்புத்தூரில் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் முதல்வர் பழனிச்சாமி.

முதல்வரின் பேச்சை கேட்க மக்கள் கடல்போல் திரண்டுள்ளனர். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த பிரச்சார கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமி பேசியபோது அதிமுகவின் மடியில் கனமில்லை அதனால் கொஞ்சமும் பயம் இல்லை. மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என பேசியுள்ளார்.