EPS Speech About DMK Election Statement

திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது குறித்து முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

EPS Speech About DMK Election Statement : தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம் அதை செய்வோம் என அனைத்து கட்சிகளும் மாறி மாறி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திருத்துறைப்பூண்டியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது கேள்வியெழுப்பியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்துள்ளார் ஸ்டாலின். ஆனால் நான் ஏற்கனவே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விவசாய கடனை தள்ளுபடி செய்து விட்டேன் என தெரிவித்துள்ளார் முதல்வர் பழனிசாமி. அப்படியிருக்கையில் எந்த கடனை தள்ளுபடி செய்வீர்கள்?? இப்படியெல்லாம் ஏமாற்ற நினைக்கிறார்கள் பாருங்க என கேள்வி எழுப்பியுள்ளார்.

Tamil Nadu CM E Palaniswami, Aishwarya Rajesh at the Finals of 68th National Basketball Championship

அதன் பின்னர் தொடர்ந்து பேசிய பொழுது ஏக்கர் நிலம் வழங்கப்படும் என தெரிவித்தார். திருத்துறைப்பூண்டியில் எத்தனை பேர் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி இருக்கிறீர்கள்?? எல்லோருக்கும் இரண்டு ஏக்கர் நிலம் கொடுப்பது என்பது சாத்தியமா?? இது போன்று நம்ப முடியாத பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள் என முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்