ஸ்டாலின் பேச்சுக்கு முதல்வர் பழனிசாமி அதிரடி பதில்! | tn Govt | Edappadi K. Palaniswami

EPS Reply to MK Stalin : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற பின் 4 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்து விடும் என கூறிவந்த எதிர்க்கட்சிகள் வாயடைத்துப் போகும் அளவிற்கு நான்காண்டு கடந்து சாதனை படைத்துள்ளார் முதல்வர் பழனிசாமி.

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இல்லை என்று கூறி வருகிறார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் தானே? அப்படி என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் தானே என பதிலளித்துள்ளார்.

TN CM Reply to Stalin

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் பேசியுள்ளார்.

தற்போது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து வரும் ஸ்டாலின் ஆட்சியில் இருக்கும்போது ஏன் இதை செய்யவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்டாலின் அவர்களுக்கு பொய் பேசுவதற்காக நோபல் பரிசு கொடுக்கலாம் எனவும் கிண்டலடித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

இந்த கூட்டம் நிகழ்ச்சிக்கு முன்பாக ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது கோவில் நிர்வாகம் சார்பாக முதல்வர் பழனிசாமி இராமானுஜர் படம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்டோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.