ஸ்டாலின் சொல்றத நான் செய்றேனா? ஆவடியில் முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

EPS Questions to Stalin : தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் இன்று ஆவடியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.

அப்போது விவசாய கடனை ரத்து செய்வதற்காக திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

குறைகளை பெட்டியில் போடாதீர்கள்; அழையுங்கள் 1100 : முதல்வர் குறைகளை பெட்டியில் போடுவதெல்லாம் பழைய காலம், வீட்டிலிருந்தே அரசை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். செல் போன் மூலம் மக்கள் குறைத்தீர்க்கும் திட்டத்தை ஒரு வாரத்தில் தொடங்க உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் நாடகம் ஆடுவது திமுக தான் என கூறியுள்ளார்.

7 பேரும் 28 ஆண்டுகளாக சிறையில் இருப்பதற்கு ஒரே காரணம் திமுக தான் என்று பேசியுள்ளார்.

மேயராகவும், துணை முதல்வராகவும் இருந்தபோது ஸ்டாலின் ஏன் ஊர், ஊராக செல்லவில்லை என கேள்வி எழுப்பினார்.