EPS Press Meet in Salem

சேலம் மாவட்டத்தில் கொரானாவை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன என முதல்வர் பழனிச்சாமி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

EPS Press Meet in Salem : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றில் இருந்து மக்களை எப்படி பாதுகாப்பது என தெரியாமல் உலகின் அத்தனை நாடுகளும் அல்லல்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில் தற்போது தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக தற்போது அரச தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி தன்னுடைய சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் கொரானா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்துள்ளார்.

அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்திருந்த போது சேலம் மாவட்டத்தில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என பேசினார். ஆனாலும் தமிழகம் முழுவதுமான கொரானா பாதிப்புடன் ஒப்பிட்டு பார்த்தால் சேலம் மாவட்டம் தொடர்ந்து நான்காவது அல்லது ஐந்தாவது இடம் என மாறி மாறி இடம் பிடித்திருக்கிறது.

மக்கள் அனைவரும் அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்றி நடந்து கொண்டால் வெகுவிரைவில் முழுவதுமாக கொரானாவை விரட்டி விடலாம் என பேசியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சேலம் மாவட்டத்தில் இதுவரை 30,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 29 ஆயிரம் பேர் குணமடைந்து விழித்திருந்து இருப்பதாகவும் மேலும் 400 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தற்போது 500 பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் கொரானா தொற்றை கட்டுபடுத்த ஏற்கனவே பரிசோதனைகள் அதிகரித்தது போலவே தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கி இருப்பதாக தெரிவித்தார்.

சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 81 பணிகள் நடந்து வருவதாகவும் அவற்றில் 20 முடிவடைந்துள்ளதாகவும் 3 டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதற்காக மத்திய மாநில அரசு இணைந்து 965 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் தங்குதடையின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கி வருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் 2,12,232 பேர் முதியோர் உதவித்தொகை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நலத்திட்ட பணிகள் என்னென்ன என்பது குறித்தும் அவர் பேசினார்.

அது குறித்த முழு வீடியோ இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.