மதுரையில் மேலும் 1.10 லட்சம் குழாய்கள் இணைப்புகள் - தமிழக முதல்வர் உறுதி.!! | Madurai | EPS | Tamil

EPS Press Meet in Madurai : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு மிகவும் திறம்பட செயலாற்றி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று, நிவர் புயல், புரெவி புயல் என அனைத்திலும் மேற்கொள்ளப்பட்ட சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பாதிப்புகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக முதல்வர் மாவட்ட வாரியாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்து மாவட்டங்களுக்கான நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து வருகிறார்.

அந்த வகையில் இவர் மதுரையில் ஆய்வு செய்ய சென்றிருந்த போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகம் முழுவதும் 76 கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

40 இலட்சம் புதிய குடிநீர் இணைப்புகளை வழங்க திட்டமிட்டு இதுவரை 7 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு நீர் கொண்டு வரும் கூட்டு குடிநீர் திட்டம் வரும் 2023-ம் ஆண்டுக்குள் முடிவடையும். இதனால் மதுரையில் மேலும் 1.10 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்க முடியும் என தெரிவித்துள்ளார்.