EPS Political Life History

விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் முதல்வராக உயர்ந்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அரசியல் வாழ்க்கை எப்படி தொடங்கியது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

EPS Political Life History : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மே 12ஆம் தேதி 1954 ஆம் வருடம் கருப்பசாமி கவுண்டர் மற்றும் தவசி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.

இவருடைய சொந்த ஊர் சேலம் மாவட்டத்தில் எடப்பாடி தாலுகாவில் நெடுங்குளம் அருகே உள்ள சிலுவம்பாளையம் கிராமம்.

சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த முதல்வர் பழனிசாமி அவர்கள் சுறுசுறுப்பான குழந்தையாகவே வளர்ந்துள்ளார். பள்ளிகளில் படிக்கும் போதே விளையாட்டு போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

பள்ளிப் படிப்பை முடித்த இவர் பின்னர் ஸ்ரீ வாசவி கல்லூரியில் சேர்ந்து விலங்கியல் துறையில் இளங்கலைப் படிப்பை தொடங்கியுள்ளார். ஆனால் இவரால் படிப்பை முழுமையாக முடிக்க முடியவில்லை.

ஓட்டளிக்கும் உரிமை கிடைப்பதற்கு முன்பாகவே அரசியலில் ஈடுபடத் தொடங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இவருடைய பதினெட்டாவது வயதில் சிலுவம் பாளையம் கிராமத்தின் கீழகை கழக செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அதன்பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெள்ளம் மூட்டைகளை வாங்கி விற்பனை செய்யும் தொழிலை தொடங்கினார். இந்த தொழிலிலும் அவர் வெற்றி கொண்டார்.

இந்த நேரத்தில்தான் அவர் திரு முத்துசாமி என்பவருடன் நெருக்கமாக இருந்தார். முத்துசாமி என்பவர் தமிழகத்தின் அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அவரின் மூலமாக அதிமுக கட்சியின் மேலிடத்திற்கு அறிமுகமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தன்னுடைய சிறப்பான கட்சி செயல்பாடுகளிலும் கடின உழைப்பாலும் பாராட்டுக்களைப் பெற்று 1984 ஆம் ஆண்டு கோனேரிப்பட்டி கீழகை செயலாளர் பதவியை பெற்றார்.

அதன்பின்னர் 1982ஆம் ஆண்டு எடப்பாடியின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளராக பதவி பெற்றார்.

அப்போதைய சட்டமன்ற தேர்தலின் போது சேலம் மாவட்டத்தில் அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற மிக முக்கிய காரணமாக எடப்பாடி பழனிச்சாமி திகழ்ந்தார். இதனால் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய ஒருவராக மாறினார்.

தொடர்ந்து சிறப்பான கட்சி நடவடிக்கைகளால் செல்வி ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில் அமைச்சராகவும் பதவி வகித்தார்.

இதுபோல கட்சியின் மீது கொண்ட ஈடுபாட்டாலும் அயராத உழைப்பாலும் இன்று தமிழக முதல்வர் என்ற மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றுள்ளார்.

ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த பழனிச்சாமி அவர்கள் மீது தமிழக முதல்வராக உயர்ந்து இருப்பது நிச்சயம் பெருமைக்குரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.