பாமகவின் போராட்டம் எதிரொலி.., சாதுர்யமாக முடிவெடுத்த முதல்வர் எடப்பாடி K.பழனிசாமி..! | PMK Protest

EPS Order on Rank Allocation : சாதி வாரியான தற்போதைய நிலவரப்படியான புள்ளி விவரங்களை சேகரிக்கும் விதிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து, அறிக்கை சமர்பிக்க ஒரு பிரத்தியேக ஆணையம் அமைக்க முதல்வர் எப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் கூட்டணி கட்சியான பாமக வைத்த 20% இட ஒதுக்கீடு போரட்ட கோரிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் முடிவு ஒன்றை எடுத்துள்ளார் என கூறலாம்.

தமிழகத்தில் 25% வன்னியர்கள் உள்ளனர் என அன்புமணி ராமதாஸ் கூறிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அந்த ஆணையத்தின் முடிவின் அடிப்படையிலேயே இதன் பிறகு சாதி வாரி சலுகைகள் வழங்கப்படும், மேலும் 69% இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இந்ந வழக்கினையும் எதிர்கொள்ள இந்த ஆய்வு புள்ளி விவரங்கள் சரியாக இருக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார்

இதனால், பட்டியல் இனத்தவர்களும், பட்டியல் பழங்குடியினருக்கும் உதவியாய் அமைவது போன்ற ஓர் முடிவை முதல்வர் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.