YouTube video

EPS Got More Support in AIADMK Meeting : அதிமுக கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று 5 மணிநேர சந்திப்பாக, கட்சியின் மூத்த தலைவர்களுடன் சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் OPSக்கு மிக மிக குறைந்த அளவிலான ஆதரவு கிடைத்தது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் தங்கமணி, திரு. சீனிவாசன், திரு.கடம்பூர் ராஜு, திருமதி.சரோஜா போன்ற மூத்த தலைவர்கள் ஓ.பி.எஸ்ஸை ஓரங்கட்டி, இ.பி.எஸ்ஸை ஆதரித்தனர்.

செயலாளர்கள் திரு.அஷோகன் & திரு.ஷெட் கான் (முன்னதாக OPS க்கு ஆதரவாக இருந்தவர்) ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் அமைச்சர்கள், இபிஎஸ்ஸைப் பொருத்தவரை, அவர் எப்போதுமே அம்மாவுக்கு (செல்வி. ஜெயலலிதா) மிகவும் பிடித்த ஒருவராகவே இருந்தார் என கூறியுள்ளனர்.

EPS Power in AIADMK :

இதுவரை OPS க்கு ஆதரவாக இருந்த திரு.நத்தம் விஸ்வநாதன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

திரு. பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் மட்டுமே OPS க்கு ஆதரவாக தனது கருத்தை வெளிப்படுத்தினார், ஆனால் அவருக்கு கட்சியில் நற்பெயர் இல்லை. அம்மா அவரை கட்சியிலிருந்து விலக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டத்தில் தற்போதைய அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. ஓ பன்னீர் செல்வத்திற்கு மிக மிக குறைந்த அளவிலேயே ஆதரவுகள் பதிவாகியுள்ளன.

எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு அடுத்ததாக தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அதிமுகவில் அதிகமான அளவில் ஆதரவு குவிந்து உள்ளன. தமிழகத்தில் மீண்டும் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்களே முன்னிறுத்த வேண்டும் என கோரிக்கைகள் தொடர்ந்து அழைத்த வண்ணம் உள்ளன.

கடந்த முறை ஓ பன்னீர் செல்வம்அவர்களில் தரப்பில் இருந்தவர்கள் கூட தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சி திறமையைக் கண்டு அவர் பக்கம் தாவியுள்ளனர்.

இதனால் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் செயற்குழு கூட்டத்தில் குறைந்த அளவிலான ஆதரவை கொண்டவராகவே இருந்துள்ளார். அவர் கட்சிக்கும் ஆட்சிக்கும் எதுவும் செய்யவில்லை தன்னுடைய குடும்பத்தை பலப்படுத்துவதே குறிக்கோளாகக் கொண்டிருந்தார் என தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக இறுதி முடிவு அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் பழனிச்சாமி அவர்களையே மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.