Watch Full VIdeo : – பிரச்சாரக் கூட்டத்தில் நுழைந்த பசு – முதல்வரின் மனிதாபிமான செயல்.!

EPS Campaign in Kattumannar Kovil : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகளும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள அதிமுக மற்றும் தங்களது கூட்டணி கட்சியான பாஜக மற்றும் பாமக கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து மக்களிடையே ஓட்டு சேகரித்து வருகிறார். ஒரு நாளைக்கு ஏழு முதல் பத்து பிரச்சார கூட்டங்கள் வரை மிகுந்த எழுச்சியோடு மக்களை சந்தித்து அதிமுகவின் சாதனைகளை எடுத்துக்கூறி ஓட்டு சேகரித்து வருகிறார். திமுக செய்த ஊழல்கள் பற்றியும் மக்கள் மத்தியில் பேசி நடிக்கிறார்.

அந்த வகையில் இன்று காட்டுமன்னார்கோவிலில் நடந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமி பங்கு பெற்றார். அந்த காட்டுமன்னார்கோயில் பிரச்சாரத்தின் போது ஒரு பசு உள்ளே புகுந்தது.

பசு உள்ளே நுழைந்ததை கண்ட முதல்வர் பழனிசாமி தொண்டர்களிடம் மாட்டுக்கு வழிவிடச்சொல்லியும் பசு மாட்டை அடிக்க வேண்டாம் என அறிவுறை கூறி, மாட்டை பத்திரமாக கூட்டத்தை விட்டு வெளியே அனுப்பினார். வழி தவறி வந்த வாயில்லா ஜீவனை துன்புறுத்த வேண்டாம் என கூறி முதல்வர் பழனிசாமி மனிதாபிமானத்தோடு நடந்து கொண்ட செயல் அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது. முதல்வரின் செயலைக் கண்ட அதிமுக தொண்டர்களும் நெகிழ்ந்து போயினர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.