EPS and OPS Statement About ADMK
EPS and OPS Statement About ADMK

அடுத்த சிஎம் யார் என்பது குறித்துஓ பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இருவரும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

EPS and OPS Statement About ADMK : தமிழகத்தில் மாண்புமிகு அம்மா வழியில் வந்த அதிமுக ஆட்சி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்து வருகிறது.

தமிழ்நாட்டின் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை இது வேலைவாய்ப்பை அதிகரிக்கும் முயற்சியிலும் பேரிடர் காலத்தில் இருந்து மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளையும் துரிதமாக தமிழக அரசு எடுத்து வருகிறது.

இப்படியான நிலையில் அடுத்த முதல்வர் ஓபிஎஸ்-ஆ? இபிஎஸ்-ஆ? என்ற பேச்சு ஆரம்பித்து இங்கும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. மேலும் சுதந்திர தினமான நேற்று ஓ பன்னீர்செல்வம் வீட்டில் இரண்டு முறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனைக்கு பிறகு ஓ பன்னீர்செல்வம் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

விஜய் லோகேஷ் கனகராஜ் நேரில் சந்திப்பு.. மொத்தமாக முடிவுக்கு வரும் மாஸ்டர் – வெளியானது முக்கிய தகவல்

அந்த அறிக்கையில் மீண்டும் தொடர் வெற்றியைப் பெற நாம் ஒன்றிணைந்து உழைக்க வேண்டிய நேரம் இது. அதிமுக தலைமையின் அனுமதி இல்லாமல் கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

அம்மாவின் வழியில் வந்த அதிமுக தொண்டர்கள் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும், எதிர்க்கட்சிகளின் பேச்சுக்கே இடம் கொடுக்க கூடாது.

சிறு சலசலப்புகளுக்கும் இடம் தராமல் நம்மை வீழ்த்த நினைப்போரின் பேராசைகளுக்கு வாய்ப்பளிக்காமல், ஒன்றுபட்டு உழைத்திட உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக்கொள்கிறோம். கட்சி உடன்பிறப்புகள் மக்கள் பணிகளிலும், கட்சிப் பணிகளிலும் மட்டுமே கவனம் செலுத்துங்கள். கட்சியை வெற்றிச் சிகரத்திற்கு இட்டுச்செல்ல உங்கள் பணிகள் மிகவும் இன்றியமையாதவை என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கட்சி தலைமையின் அனுமதி இல்லாமல் தங்களின் தனிப்பட்ட கருத்துக்களை வெளியிட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதிமுகவின் கட்சியில் ஏற்பட்ட சிறு சலசலப்பை வைத்து குளிர்காய நினைத்த எதிர்க்கட்சிகளுக்கு தகுந்த பதிலடியாக இந்த அறிக்கை அமைந்திருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.