YouTube video

Velan Law Uses : கடந்த சில நாட்களாக தலைநகர் டில்லியே ஸ்தம்பிக்கும் அளவிற்கு விவசாயிகள், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருவது சர்வதேச அளவில் தலைப்பு செய்தியானது.

பாராளுமன்றத்தில் இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட போது பல எதிர்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க அரசு ஆதரித்த நிலையில் பிரதான எதிர்கட்சியான தி.மு.க இரண்டு அவைகளிலும் கடும் எதிர்ப்பை தெரிவித்தது. அ.தி.மு.க அரசு ஏன் ஆதரவு தெரிவித்தது எனவும் தமிழக விவசாயிகளை இந்த சட்டங்கள் ஒருபோதும் பாதிக்காது எனவும் முதலமைச்சர் பல முறை கூறிய பிறகும், தி.மு.க மற்றும் எதிர்கட்சிகள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் என்ற நாடகத்தை நடத்தி வருகின்றன.

விசாயாத் துறை தொடர்பான சட்டங்களை மாநில அரசுகளே இயற்றி கொள்ள சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநில அரசுகள் தங்களுக்கு ஏற்றவாறு வேளாண் சட்டங்களை இயற்றி செயல்படுத்தி வருகிறது.

பாராளுமன்றத்தில் வேளாண் தொடர்பாக சமீபத்தில்,

  1. விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம்
  2. விவசாயிகள் விளைபொருட்கள் வாணிபம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம்
  3. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம். ஆகிய மூன்று சட்டங்கள் இயற்றப்பட்டது.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த சட்டத்தை பொறுத்த வரை, தமிழகத்தில் கோகோ, கரும்பு, கோழிப் பண்ணை ஆகியவற்றில் நடைமுறையில் உள்ள பண்ணை ஒப்பந்த முறையை ஒழுங்குபடுத்த இச்சட்டம் வழிவகை செய்யும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், 2019-ம் ஆண்டு கொண்டு வந்த தமிழ்நாடு வேளாண்மை விளைபொருட்கள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணை மற்றும் சேவைகள் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டத்தின் நோக்கங்களை உறுதிபடுத்தும் விதமாகவும் இந்த சட்டம் அமைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகளை கட்டாயப்படுத்தும் அல்லது பாதிக்கும் ஷரத்துக்கள் ஏதும் இச்சட்டத்தில் இல்லை எனவும் தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

வணிகம் மற்றும் வர்த்தகச் சட்டத்தைப் பொறுத்தவரை, வேளாண் விளைபொருட்களை விவசாயிகள் trade area என அறிவிக்கப்பட்ட எந்த இடத்திலும் விற்பனை செய்ய இச்சட்டம் அனுமதிப்பதால், விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கு சுதந்திரம் கிடைக்கிறது.

தமிழக அரசின் விளக்கங்கள்:

குறைதபட்ச ஆதார விலையில் நடைபெறும் நெல் கொள்முதல்கள் பாதிக்காது, தொடர்ந்து நடைபெறும்

உழவர் சந்தை திட்டம் தொடர்ந்து செயல்படுவதற்கு இந்த சட்டம் வழி வகை செய்கிறது

பொது விநியோக திட்டத்தின் கீழ் விநியோகம் செய்ய விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதார விலையில் வேளாண் பொருட்கள் கொள்முதல் செய்வது தொடரும்

எதிர்பாரத திடீர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.