ENPT Song Record
ENPT Song Record

படம் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் பாடல் சாதனை படைத்து வருவது தனுஷ் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

ENPT Song Record : தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் தனுஷ். இவரது நடிப்பில் ஜகமே தந்திரம் என்ற திரைப் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார்.

மக்களின் அச்சத்தைப் போக்க மாஸ்டர் படத்தை வைத்து தியேட்டர் உரிமையாளர்கள் போடும் பக்கா பிளான்!

மேலும் இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படமாக இருந்து வருகிறது.

இது ஒருபுறமிருக்க கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா.

நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த பிறகு இப்படம் ஒரு வழியாக வெளியானது. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

மாஸ்டர் படைத்த புதிய சாதனை.. வெளியான தகவலால் தெறிக்க விட்டு கொண்டாடும் விஜய் ரசிகர்கள் – இந்த விஷயம் உங்களுக்குத் தெரியுமா?

இருப்பினும் இப்படத்தின் பாடல்கள் பெரிய அளவில் மக்களை சென்றடைந்து இருந்தன‌. இதன் காரணமாக தற்போது இப்படத்தில் இடம்பெறும் மறுவார்த்தை பேசாதே பாடல் யூடியூபில் 99.95 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

இதனை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.