ஈஸ்வரன் டீசர்

நாளை அதிகாலையில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்வரன் டீசர் : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. படத்தின் டப்பிங் பணிகளும் முடிவடைந்து பொங்கலுக்கு படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியான நிலையில் தீபாவளி விருந்தாக ஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது நாளை அதிகாலை 4.32 மணிக்கு இப்படத்தின் டீசர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதோ அந்த அறிவிப்பு

தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதே போன்று தான் அதிகாலை 3 மணிக்கு வெளியானது. தற்போது அதே பாணியில் சிம்புவின் படத்தின் டீசர் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.