Eeswaran Release Issue in India

பொங்கலுக்கு திட்டமிட்டபடி ஈஸ்வரன் திரைப்படம் ரிலீஸ் ஆகுமா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Eeswaran Release Issue in India : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக ஈஸ்வரன் என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

வரும் ஜனவரி 14-ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் திரையரங்குகளிலும் மற்ற நாடுகளில் OTT வழியாக வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் திரையரங்க உரிமையாளர்கள் OTT வழியாக மற்ற இடங்களில் படம் ரிலீசாகும் என கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவிலும் ஈஸ்வரன் திரைப்படத்தை வெளியிட மாட்டோம் என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஈஸ்வரன் திரைப்படத்தை ஆவலோடு எதிர்பார்த்த சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து படக்குழு என்ன முடிவு எடுக்கப் போகிறது, இந்த பிரச்சினையை எப்படி தீர்க்க போகிறது என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து இருந்தது.

இந்த நிலையில் படக்குழு மற்ற நாடுகளில் இப்படத்தை OTT வழியாக வெளியிடும் முயற்சியில் கைவிடுவதாக கூறியதை அடுத்து திரையரங்க உரிமையாளர்கள் ஈஸ்வரன் படத்தை வெளியிட சம்மதம் தெரிவித்துள்ளனர்.