Eeswaran Movie First Look Poster
Eeswaran Movie First Look Poster

சிம்பு மற்றும் சுசீந்திரன் ஆகியோர் முதல் முறையாக இணைந்துள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Eeswaran Movie First Look Poster : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு மற்றும் சுசீந்திரன் இயக்கத்தில் படம் வெளியாக உள்ளன.

மாநாடு திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். எஸ் ஜே சூர்யா, மனோஜ் பாரதிராஜா, பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர், ஆர்கே சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

மேலும் சுசீந்திரன் இயக்கிவரும் அட்மன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது தான் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த படத்தின் முதல் பார்வை இன்று மதியம் 12.12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி தற்போது இப்படத்தின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்திற்கு ஈஸ்வரன் என டைட்டில் வைத்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒட்டிய மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில் நடிகர் சிம்பு எப்படி இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்க.

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.