Eeshwaran Overseas Rights Announcement

ஈஸ்வரன் படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Eeshwaran Overseas Rights Announcement : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படம்தான் ஈஸ்வரன்.

சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு S தமன் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் இந்த திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் தமிழ்நாட்டு ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருந்தது.

இதனையடுத்து தற்போது இந்த படத்தின் ஓவர்சீஸ் ரிலீஸ் உரிமையை AP இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் சிம்புவின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.