Eeshwaran Movie

சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படம் எப்படி உள்ளது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Eeshwaran Movie Review : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன். இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

கதைக்களம் :

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் தனது குடும்பத்தோடு அமைதியாக வாழ்ந்து வரும் பெரியசாமி (பாரதி ராஜா).

சில காரணங்களால் தனது குடும்பத்தை அழிக்க நினைக்கும் பகைவனை கண்டு அஞ்சுகிறார். எதிரிகளிடமிருந்து தன்னுடைய குடும்பத்தை பாரதிராஜாவின் மகன் ஆன சிம்பு எப்படி பாதுகாக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

சிம்பு வழக்கம் போல் தன்னுடைய திறமையான நடிப்பால் படம் முழுவதும் ஸ்கோர் செய்கிறார்.

பாரதிராஜா பெரியசாமி கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். நிதி அகர்வால் பக்கா கிராமத்து பெண்ணாக தன்னுடைய அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நந்திதா ஸ்வேதா தன்னுடைய சிறப்பான நடிப்பால் கவர்கிறார்.

படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களை திறம்பட நடித்து கொடுத்துள்ளனர்.

தொழில்நுட்பம் :

இசை :

எஸ் தமனின் இசை படத்திற்கு பெரும் பலம் என கூறலாம். பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளன.

ஒளிப்பதிவு :

திருவின் ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.

எடிட்டிங் :

ஆண்டனியின் எடிட்டிங் கச்சிதம். படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் எடுத்து கொண்டு கோர்வையாக அழகாக கொடுத்துள்ளார்.

இயக்கம் :

சுசீந்திரன் ஒவ்வொரு நடிகர்களின் கதாபாத்திரங்களையும் அழகாக கையாண்டு ஈஸ்வரனை அழகான படமாக கொண்டு வந்து சேர்த்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

  1. சிம்பு, பாரதிராஜா நடிப்பு
  2. படத்தின் கதைக்களம்
  3. இசை
  4. பாடல்கள்

தம்ப்ஸ் டவுன் :

  1. வழக்கமான சிறுசிறு லாஜிக்கல் தவறுகள்.
REVIEW OVERVIEW
ஈஸ்வரன் விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
eeshwaran-movie-review மொத்தத்தில் ஈஸ்வரன் சிம்பு ரசிகர்களுக்கு செம ட்ரீட்.