YouTube video

Educational Achievements of Tamil Nadu Govt : பல ஆண்டுகளாக, கல்வித்துறையில், இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, கல்வித்துறையில் தொடர்ந்து பல புதிய திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

தமிழகத்தில் கடந்த 9 ஆண்டுகளில், கல்லூரி மாணவர்களின் சேர்க்கை 49% ஆக உயர்ந்துள்ளது. 2035 ஆம் ஆண்டுக்குள், நாடு முழுவதும் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை 50% ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் 2020 ஆம் ஆண்டிலேயே 49 சதவிகித்தை எட்டியுள்ளது பாராட்டுக்குரியது.

30 வருடத்திற்கு பிறகு தமிழகம் நெல் உற்பத்தியில் புதிய புரட்சி‌!

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், தலைசிறந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையிலான தரவுகள் கீழே:

• இந்தியாவின் தலைசிறந்த 40 மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 7 மருத்துவக் கல்லூரிகள் இடம் பிடித்துள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே அதிகமான சிறந்த மருத்துவக் கல்லூரிகளை கொண்ட மாநிலமாகத் தமிழகம் விளங்குகிறது. இதில், வேலூர் கிருத்துவ மருத்துவ கல்லூரி இந்தியாவிலேயே சிறந்த மூன்றாவது மருத்துவக் கல்லூரியாக திகழ்கிறது.

• இந்தியாவின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 18 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே அதிகமான சிறந்த பல்கலைக்கழகங்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழகம் உள்ளது. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த அம்ரிதா பல்கலைக்கழகம், இந்தியாவில் நான்காவது இடத்தில் உள்ளது.

• இந்தியாவின் தலைசிறந்த 100 கல்லூரிகளின் பட்டியலில் 18 இடங்களைத் தமிழகம் பிடித்துள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே அதிகமான சிறந்த கல்லூரிகளை கொண்ட மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. இதிலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஐடி மெட்ராஸ் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது.

இவ்வாறு பொறியியல், கட்டிடக்கலை, மருத்துவம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்து துறை சார்ந்த கல்வி நிறுவனங்களிலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் நடவடிக்கைகளால், இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக, தமிழகம் திகழ்கிறது.

அதுமட்டுமல்லாமல், தமிழக முதல்வரின் சீரிய முயற்சியால், உயர் கல்வி சேர்க்கையில் பாலின வேறுபாட்டையும் தமிழகம் முறியடித்துள்ளது. உயர் கல்வி சேர்க்கையில் ஆண்களின் சதவிகிதம் 49.8 ஆகவும், பெண்களின் சதவிகிதம் 48.3 ஆகவும் உள்ளது. இதிலும், தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது.

இதன் மூலம் தமிழகம் இந்தியாவிலேயே கல்வியில் முதன்மை மாநிலமாக இந்த பாரதத்தில் நாட்டிற்கே முன்னோடியாகவும் திகழ்கிறது. இது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை சேர்க்கும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.