YouTube video

Edappadi Palanisamy Request to Modi : இந்தியாவின் கலாச்சார அமைச்சகம் உருவாக்கப்பட்டு நம்முடைய கலாச்சாரத்தை உலக அளவில் பெருமைக்குரிய ஒன்றாக மாற்றி வருகிறது.

இந்திய கலாச்சாரத்தின் பெருமைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. ஆனால் இந்த குழுவில் தென் இந்தியாவில் இருந்து யாரும் இடம்பெறவில்லை. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இருந்து யாரும் நியமிக்கப்படவில்லை.

தமிழகம் இந்தியாவிற்கே கலாச்சாரத்தில் முன்னோடியாகத் திகழ்ந்து வரும் மாநிலம். நமது மாநிலத்தில் வரலாறுகளைப் பேசும் பல விஷயங்கள் இடம்பெற்று உள்ளன.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை புகழ்ந்து தள்ளும் தமிழக விவசாயிகள்!

மகாபலிபுரம், தஞ்சை பெரிய கோவில், உத்திரமேரூர் கல்வெட்டுகள், கீழடி என தமிழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க பெருமைகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி கூட சீன பிரதமருடன் இணைந்து மகாபலிபுரத்தின் சிறப்புகளை பார்வையிட்டு வியந்தார். இப்படியான நிலையில் கலாச்சாரத்தை மேம்படுத்தும் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறாதது வேதனை அளிக்கிறது.

தமிழகத்தின் புகழை கருத்தில் கொண்டு இந்த குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களை நியமிக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக மக்களும் ஒவ்வொரும் மத்திய கலாச்சாரத்துறைக்கு தனித்தனியாக கோரிக்கைகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.