அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரிய பாதிப்பு இல்லை - முதல்வர் பழனிசாமி பேட்டி | NivarCyclone

TN EPS Visit to Cuddalore : தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக வங்கக் கடலில் உருவான நீலம் புயல் நேற்று நள்ளிரவு 11. 30 மணிக்கு மேல் கரையை கடக்க தொடங்கி 2.30 மணிக்குள் முழுவதுமாக கரையை கடந்தது.

இந்த புயலால் சென்னையில் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் கடலூர் உள்ளிட்ட பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மரங்கள் வேரோடு சாய்ந்தன, மின்சார கம்பங்கள் சாய்ந்தும் உள்ளது.

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் பகுதிகளை நேரில் பார்வையிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

Tamilnadu Got Best Perfomance Award

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் எந்த அளவில் நடைபெறுகின்றன என்பதை ஆய்வு செய்யும் அந்த பகுதிகளில் நிவாரண உதவிகளைச் செய்யவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புயலை எதிர்கொள்ள தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெருமளவிலான சேதாரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.