தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் இரண்டு அதிரடி அறிவிப்புகள் - முதல்வருக்கு கிடைத்த புது அந்தஸ்து!

Edappadi K Palanisamy Announcement : சட்ட பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு நாளன்றே அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு தனது ராஜதந்திர நடவடிக்கையால் தேர்தல் வெற்றிக்கான இறுதி அஸ்திரத்தை ஏவி மக்களை தன் பக்கம் திருப்பியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் தேதிகள் கடந்த 26ம் தேதி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துவிடும், இந்த காலத்தில் எந்தவித புதிய திட்டங்களையோ அறிவிப்புகளையோ வெளியிட முடியாது.

டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என்று டில்லியிலிருந்து செய்தியாளர்கள் குழு மூலம் செய்திகள் வந்தவுடன், ஊடகங்கள் அதனை பிரேகிங் செய்திகளாக வெளியிட்டது.

அனைத்து அரசியல் கட்சிகளும் அலர்ட் ஆகின, தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர்கள் சந்திப்பிற்காக காத்து கிடந்தன, அதே சமயம் தேர்தல் தேதி ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் இருக்கும் மூன்றாம் வாரத்தில் இருக்கும் என்று தங்களது யூகங்களை பத்திரிக்கையாளர்கள் சமூக வலைதளங்கள் மூலம் பரப்பினர். இதற்கிடையே தமிழக சட்ட மன்ற கூட்டம் காலை தொடங்கி நடைபெற்று வந்தது.

தலைமை தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு குறித்த தகவல் மக்களை சென்றடைவதற்குள் தமிழக மக்கள் கொண்டாடும் விதமான இரண்டு முக்கிய அறிவிப்புகள் அவர்களை சென்றடைந்தது. ஏழை எளிய மக்கள் கூட்டுறவு சங்கங்களில் 6 சவரன் வரை வைத்து பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பும், கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுவினர் பெற்ற கடன்கள் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்புகளை சட்ட சபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அந்த அறிவிப்புகள் தான். இது ஈபிஎஸ்-ன் அரசியல் ராஜதந்திர மூவ் என்று அரசியல் நோர்க்கர்கள் கூறுகின்றனர்.

இறுதியாக தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர்கள் சந்திப்பை அனைவரும் எதிர்நோக்கிய சமயத்தில் தமிழக சமூக நீதி வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த சட்ட மசோதா சட்ட பேரவையில் நிறைவேற்றப்பட்ட செய்தி வெளியானது. வன்னியர் சமுதாய மக்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது நிரந்தரமல்ல என்றும் முழு அறிக்கை பெறப்பட்டவுடன் இது மாற்றி அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகள் யாரும் எதிர்பாத்திராத வகையில் அமைந்த இந்த அறிவிப்பு மூலம் எடப்பாடி பழனிசாமி அரசியல் சாணக்கியன் என்பதை நிரூபித்துள்ளார். பா.ம.கவை கூட்டணிக்குள் வர வைத்த அதே சமயம், தமிழகத்தின் வடக்கு மற்றும் மேற்கு மண்டலத்தை முற்றிலும் தன் வசப்படுத்தியுள்ளார் எடப்பாடிபழனிசாமி.

அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகள் மூலம் செய்யவுள்ள திட்டங்களை தான் தெரிவிக்கின்றனர், ஆனால் விவசாய கடன் தள்ளுபடி, எழை மக்களின் நகைக்கடன் தள்ளுபடி, மகளிரி சுய உதவிக்குழுவினரின் கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகள் தேர்தல் அறிக்கைகளில் சொல்ல வேண்டியதை செய்து காட்டி எதிர் கட்சிகளை நாகவுட் செய்துவிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

அதுமட்டுமில்லாமல் இதுவரை சட்டப்பேரவைக்கு தினமும் வருகை தந்த ஒரே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.