7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு கல்லூரிகளில் மருத்துவப் படிப்பு பயில சீட் கிடைத்து பணம் கட்ட முடியாத மாணவர்கள் திமுகவை அணுகலாமா என கேட்கப்பட்ட கேள்விக்கு துரைமுருகன் அளித்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DuraiMurugan Press Meet : இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் மருத்துவப் படிப்பு பயில நீட் தேர்வு கட்டாயம் என அறிமுகப்படுத்தப்பட்டு ஒவ்வொரு வருடமும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வாவது என்பது மிகவும் சிரமமான ஒன்றாக இருந்துவருகிறது. இதனால் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மருத்துவ கனவை நனவாக்க தமிழக அரசு 7.5 சதவீத இட ஒதுக்கீடட்டு மசோதாவை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

இந்தநிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த போது அவரிடம் 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது 7.5% இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தும் அரசு கட்டணம் கூட செலுத்த முடியாத நலிந்த மாணவர்கள் உதவி கேட்டு தி.மு.கவை அணுகலாமா? என கேட்கப்பட்டது.

அதற்கு துரை முருகன் அவர்கள் வருஷத்துக்கு ₹40 ஆயிரம் கூட கட்ட முடியாதவங்க எதுக்கு டாக்டருக்கு படிக்கணும்? போங்கயா என பதில் அளித்துள்ளார்.

கல்வி கட்டணம் கட்ட முடியாத ஏழை மாணவர்களுக்கு நாங்கள் உதவுவோம் எனக் கூறாமல் நாங்க எதுக்கு உதவ வேண்டும் என்பதுபோல துரைமுருகன் பேசியிருப்பதை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சீட் பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளின் முழு கட்டண தொகையை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என முதல்வர் பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.