Drawing Photos of Keerthy Suresh

உலக ஓவிய தினமான இன்று ரசிகர்கள் வரைந்த புகைப்படங்களை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Drawing Photos of Keerthy Suresh : தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் விஜய் சூர்யா தனுஷ் சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் இவர் தெலுங்குவில் நடித்திருந்த மகாநதி திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றார்.

தற்போது கீர்த்தி சுரேஷ் இன்று உலக ஓவிய தினம் என்பதால் ரசிகர்கள் தன்னை தத்ரூபமாக வரைந்த ஓவியங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள ஓவிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.