Draupathi Team Invites Pa Ranjith
வாங்க திரௌபதி படத்தை பாருங்க என இயக்குனர் பா. ரஞ்சித்துக்கு இயக்குனர் மோகன் ஜி மற்றும் தயாரிப்பாளரும் விநியோகிஸ்தருமான JSK கோபி ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Draupathi Team Invites Pa Ranjith : தமிழ் சினிமாவில் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட், ஷீலா ராஜ்குமார், கருணாஸ் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் திரைப்படம் திரௌபதி.

நாடக காதலை பற்றி பேசும் இப்படத்தை பார்க்க படத்தின் விநோயோகிஸ்தர் JSK கோபி மற்றும் படத்தின் இயக்குனர் மோகன் ஜி ஆகியோர் ட்விட்டரில் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த முறை அது இல்ல.. மாஸ்டர் இசை வெளியீடு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல் – சோகத்தில் ரசிகர்கள்.!

இது குறித்து JSK கோபி பதிவிட்டுள்ள டீவீட்டில் சகோதரர் பா.ரஞ்சித் அவர்களுக்கு .. நீங்கள் திரௌபதி படத்தை பார்க்க வர வேண்டும். உங்களை திரௌபதி படம் பார்க்க வைக்க முயற்சிகள் செய்தேன். ஆனால் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் ட்விட்டர் மூலமாக அழைப்பு விடுகிறேன்.. அனைவரும் சமம் என்ற அம்பத்கார் அவர்களை வார்த்தையை உண்மையாக்க நீங்கள் திரௌபதி படத்தை பார்க்க வேண்டும் என்பது என் ஆசை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த டீவீட்டின் மூலமாக இயக்குனர் மோகன் ஜி அவர்களும் நானும் அன்புடன் அழைக்கிறேன் என் சகோதரனை என குறிப்பிட்டுள்ளார்.

சமத்து புள்ளையான சிம்பு.. மாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான புகைப்படம்.!

இவர்களின் அழைப்பை ஏற்று இயக்குனர் பா. ரஞ்சித் திரௌபதி படத்தை பார்க்க முன்வந்தால் அது ஆரோக்யமான போட்டியாக இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் பேசி கொள்கின்றது.

ரஞ்சித் என்ன பதிலளிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Draupathi Team Invites Pa Ranjith : 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.