Draupathi Movie Review
Draupathi Movie Review

மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்டு, ஷீலா ராஜ்குமார், கருணாஸ் மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் திரௌபதி.

இப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

ஊரில் சிலம்ப கலைஞராக இருக்கும் ரிச்சர்ட் தன்னுடைய மாமன் மகள் திரௌபதியை திருமணம் செய்து கொள்கிறார். திரௌபதி ஊருக்காக போராடும் பெண்மணியாக நடித்துள்ளார்.

மேலும் இவரின் சித்தப்பா ஊர் தலைவராக இருக்கிறார். இவருக்கு ஒரு மகள். திடீரென இவரது மகள் பதிவு திருமணம் செய்து கொண்டதாக ஊருக்குள் செய்தி பரவ அவர் உயிரை மாய்த்து கொள்கிறார். தொடர்ந்து திரௌபதி மற்றும் அவரின் தங்கையும் கொல்ல சதி திட்டம் தீட்டப்படுகிறது.

அதன் பின்னர் என்ன நடந்தது? திரௌபதி, ரிச்சர்டும் என்ன செய்கிறார்கள்? இறுதியில் என்னவானது? என்பது தான் இப்படத்தின் சமூக சிந்தனை கொண்ட கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

கிட்டத்தட்ட 15 வருடமாக சினிமாவில் ஒரு நல்ல இடம் கடுமையாக போராடி வரும் ரிச்சர்டுக்கு இப்படம் நல்லவொரு இடத்தை கொடுக்கும். அப்படி சிறப்பான எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஷீலா ராஜ்குமார் :

கிராமத்து பெண்ணாகவும், கிராமத்துக்காக போராடும் பெண்ணாகவும் அவரின் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்து நம்மை கவர்கிறார்.

கருணாஸ் :

கருணாஸ் பொது நலத்திற்காக போராடும் வழக்கறிஞராக நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். இப்படம் அவரின் அரசியல் வாழ்க்கைக்கும் கை கொடுக்கும் என நம்பலாம்.

தொழில் நுட்பம் :

இசை :

ஜீபினின் பின்னணி இசை ஓகே.

ஒளிப்பதிவு :

மனோஜ் நாராயணின் ஒளிப்பதிவு காட்சிகளை தெளிவாக படமாக்கியுள்ளது.

எடிட்டிங் :

தேவராஜின் எடிட்டிங் பிளாஸ்பேக் காட்சிகளில் இன்னும் கொஞ்ச, வேகப்படுத்தி இருக்கலாம். படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

இயக்கம் :

இயக்குனர் மோகன் ஜி பலரும் அஞ்சும் ஒரு விசயத்தை கதைக்களமாக எடுத்து அதை சிறப்புற செய்துள்ளார். 1 கோடிக்கும் குறைவான செலவில் இந்த படத்தை படமாக்கி இருப்பது பாராட்ட வேண்டிய விசியம்.

தம்ப்ஸ் அப் :

படத்தின் கதைக்களம்
ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ் ஆகியோரின் நடிப்பு
துணிச்சலாக சில விசயங்களை பேசியது.

தம்ப்ஸ் டவுன் :

சில இடங்களில் படத்தின் வேகத்தை இன்னும் கூட்டி இருக்கலாம்.
வழக்கமான லாஜிக்கல் தவறுகள்