Don Movie Pooja Photos

பூஜையுடன் இன்று சிவகார்த்திகேயனின் டான் படம் தொடங்கியுள்ளது.

Don Movie Pooja Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.இவரது நடிப்பில் அயலான், டாக்டர் போன்ற திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

இதனைத் தொடர்ந்து அட்லியின் துணை இயக்குனரான சிபிச் சக்ரவர்த்தியின் இயக்கத்தில் டான் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார்.

மேலும் பாலா, எஸ் ஜே சூர்யா, சூரி, சமுத்திரகனி, சிவாங்கி போன்ற திரையுலக பிரபலங்கள் இந்தப் படத்தில் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.

இந்நிலையில் இன்று பூஜையுடன் இந்தப்படம் தொடங்கியுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.