Doctor Shooting Wrapped

சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் படத்தின் படப்பிடிப்புகள் முற்றிலுமாக முடிவடைந்து இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Doctor Shooting Wrapped : தமிழ் சினிமாவில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் தன்னுடைய பயணத்தை தொடங்கி தொகுப்பாளராகவும் காமெடி நடிகராக வலம் வந்து தற்போது முன்னணி ஹீரோவாக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் அயலான், டாக்டர் என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. அயலான் திரைப்படத்தை நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கி வருகிறார்.

மேலும் டாக்டர் திரைப்படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது படப்பிடிப்புகள் முழுவதையும் படக்குழு நிறைவு செய்துள்ளது.

படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினர் ஒன்றாக இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்