டாக்டர் படத்தின் கதை என்ன என்பது குறித்து இயக்குனர் நெல்சன் பேசியுள்ளார்.
Doctor Movie Story : தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார்.
நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகி பாபு மற்றும் பலர் இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.
தற்போது இப்படத்தில் இருந்து சில போட்டோக்கள் கசிந்திருந்த நிலையில் இப்படம் மெடிக்கல் மாபியா பற்றி பேச இருப்பதாக தகவல்கள் பரவின.
விக்ரமின் 60 படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி! – வெளியான மாஸ் அப்டேட்
ஆனால் அவையெல்லாம் உண்மை அல்ல, இது ஒரு காமெடி படம். சிவகார்த்திகேயன் என்டர்டெயின்மென்ட் நடிகர் என்பதால் லாஜிக் மீறாத காமெடி படமாக இப்படம் உருவாகி உள்ளது என இயக்குனர் நெல்சன் தெரிவித்துள்ளார்.
இந்தப்படம் கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் படக்குழு என்ன முடிவு செய்திருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.