Doctor Movie Release Update
Doctor Movie Release Update

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Doctor Movie Release Update : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ஹீரோ திரைப்படம் ஓவர் பில்டப்பால் சரியாக ஓடாமல் சறுக்கத்தை ஏற்படுத்தியது, மிஸ்டர் லோக்கல் திரைப்படம் காமெடி படம் என்ற பெயரில் காமெடியே இல்லாமல் வெளியானதால் தோல்வியைத் தழுவியது.

அஜித்தோட பணிவே பணிவு தான் – இணையத்தை கலக்கும் விஸ்வாசம் மேக்கிங் வீடியோ.!

இதனால் சிவகார்த்திகேயனின் கரியர் அவ்வளவு தான் என பேசாத ஆட்களே இல்லை. அதன் பின்னர் நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலமாக மீண்டும் பழைய இடத்தை பிடித்து தன்னை பற்றி பேசியவர்களை எல்லாம் வாயடைக்க வைத்தார்.

மேலும் சிவகார்த்திகேயன் தற்போது கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்டர் என்ற படத்தில் நடித்து வந்தார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அமல்படுத்தப்பட்ட 144 தடை உத்தரவால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது.

கன்னடத்திலும் என நிரூபிக்க தல.. விஜய் படத்தையும் பின்னுக்குத் தள்ளி சாதனை – TRP-ல் திணற விட்ட டாப்-5 படங்கள்!

இந்த நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு நிறைவுக்கு வந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்புகளை கோவாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

திட்டமிட்டபடி விரைவில் படப்பிடிப்புகள் தொடங்கினால் இந்த படத்தை டிசம்பரில் கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியிட முடிவு செய்துள்ளனர்.