Doctor Movie Release Date

நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ் எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Doctor Movie Release Date : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து இவர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள டாக்டர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் கிறிஸ்துமஸ் விருந்தாக திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் படக்குழு இத்திரைப்படத்தை அடுத்த வருடம் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.