Doctor Advice to Rajinikanth

மன உளைச்சலால் உடல் நிலை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதால் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Doctor Advice to Rajinikanth : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தன.

இப்படியான நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களுக்கு கொரானா பரிசோதனை மேற்கொண்டதில் நால்வருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினிகாந்தன் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டு அவர் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார்.

உடல்நலக் குறைபாடு காரணமாக தன்னுடைய அரசியல் நுழைவை கைவிடுவதாக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார். மேலும் இதன் காரணமாக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

ரஜினியின் இந்த முடிவு குறித்து தீவிர ரசிகர்கள், மக்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் விமர்சனம் செய்து வருவதால் அவருடைய மன உளைச்சல் அதிகமாகலாம் உடல்நிலை மோசமடையலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போதைய சூழலில் அவருக்கு ஓய்வு கட்டாயம் தேவை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.