வன்னியர்கள் வளர்ச்சி - திமுக செயலாளரால் வெடித்த சர்ச்சை!! | DMK Vs PMK | MK.Stalin | Anbumani

DMK Speech About Vanniyar : தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் வன்னியர் சமுதாயத்தில் இன்று படித்த இன்ஜினியர்கள் உள்ளது கருணாநிதி போட்ட பிச்சை என்று பெரம்பலூர் மாவட்ட ஆலத்தூர் ஒன்றிய தி.மு.க செயலாளரும் கே.என் நேருவின் மைதுனருமான கிருஷ்ணமூர்த்தி கூறியது வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்துவது போல இருப்பதாக வன்னியர் சங்கங்கள் தெரிவித்துள்ளது. தி.மு.க இதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

DMK Speech About Vanniyar

சாதி அரசியல் செய்ய மாட்டோம், மதசார்பின்மையை கடைபிடிப்போம் என கூறும் திராவிட கட்சியான திமுக, களத்தில் இதுபோல தான் சாதி பெயர்களை கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது என குற்றம் சாட்டியுள்ளனர்.