dmk poster

கலைஞர் கருணாநிதி இல்லாத திமுக போஸ்டர் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவிற்கு பின் திமுக தலைவராக அவரின் மகன் ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதன் பின் நடந்த சில தேர்தல்களில் அவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் பங்கு பெற்றார். அவரின் பிரச்சாரமே பல தொகுதிகளில் வெற்றியை தேடித்தந்ததாக உடன்பிறப்புகள் பொங்க ஸ்டாலின் வகித்துவந்த திமுக இளைஞரணி செயலாளர் பதவி உதயநிதிக்கு வழங்கப்பட்டது.

அதன்பின் திமுக கூட்டங்களில் பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் வரிசையில் உதயநிதியும் முன்னிறுத்தப்பட்டார். இது தொடர்பான பேனர்கள் சமூக வலைத்தளங்களில் கண்டனத்திற்கு உள்ளானது.

இந்நிலையில், தற்போது உதயநிதியை முன்னிறுத்தி ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் உதயநிதி, ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் உள்ளனர். ஆனால், கருணாநிதியின் புகைப்படம் இடம் பெறவில்லை. இதை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து திமுக கருணாநிதியை மறந்து விட்டதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதேநேரம், அந்த போஸ்டரில் கருணாநிதி படம் இடம் பெற்றிருந்ததாகவும், அதை அழித்துவிட்டு வேண்டுமென்ற சிலர் விஷமத்தனம் செய்துள்ளதாகவும் திமுகவினர் சிலர் கூறி வருகின்றனர்.