DMK in Next Idea on Election 2021

ஸ்டாலின் வருகிறார் என்ற தலைப்பில் 100 நாள் பிரச்சாரம் திட்டத்தை கையில் எடுக்க உள்ளது திமுக.

DMK in Next Idea on Election 2021: தமிழக சட்ட மன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் ஐ -பாக் நிறுவனம் வகுத்து கொடுத்த பெயரில் திமுகவும் கிராம சபை கூட்டம் போன்ற பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளது.

தேர்தல் வரை நூறு நாட்கள் என்ற பிரச்சார யுக்தியை ஐபேக் நிறுவனம் வகுத்துள்ளது. இதற்கு “ஸ்டாலின் வருகிறார்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரத்தை 4 கட்டங்களாக நடத்த தி.மு.க திட்டமிட்டுள்ளது. இந்த பிரச்சாரத்தில் கலந்துரையாடல், சந்திப்பு உள்ளிட்ட 13 விதமான நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது. ஐபேக் வகுத்து கொடுத்த திட்டங்களில் இந்த திட்டம் மிகவும் பெரிதாக இருக்கும் என கூறப்படுகிறது.

நியூமராலஜியில் அதிக நம்பிக்கை கொண்ட பிரஷாந்த் கிஷோர் அனைத்து வகையான பிரச்சாரத்திற்கும் இரண்டு வார்தைகளை கொண்ட தலைப்புகளை தேர்ந்தெடுப்பது வழக்கம். “ஒன்றிணைவோம் வா” , “எல்லோரும் நம்முடன்” “அதிமுகவை எதிர்ப்போம்” “விடியலை நோக்கி” என்ற வரிசையில் தற்போது “ஸ்டாலின் வருகிறார்” இணையவுள்ளது. திராவிட கட்சி ஒன்றுக்கு பிரச்சார யுக்தியை வகுத்துக்கொடுக்கும் ஒரு நபர் இப்படி மூடிநம்பிக்கையின் அடிப்படியில் முடிவுகளை எடுப்பது கட்சி தலைவர்களையே கடுப்பாக்கியுள்ளது.

ஏற்கனவே ஆந்திராவில் “அண்ணன் ஒஸ்தன்னாடு” (அண்ணன் வருகிறார்) என்ற ஐடியாவை ஐபேக் கொடுத்தது. அதேபோல, மேற்கு வங்கத்திலும், “தீதி ஆஸ்ச்சே” (அக்கா வருகிறார்)
என்னும் பெயரை சூட்டியது. ஐபேக் நிறுவனம் புதிய திட்டங்களை வகுக்காமல் வேறு மாநிலங்களில் பயன்படுத்திய அதே யுக்தியை தமிழகத்திலும் பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் வேறு மாநிலங்களில் வைத்த அதே பெயர்களை மொழி மட்டும் மாற்றி அரைத்த அதே மாவை அரைத்துள்ளது ஐ பாக்.

இந்நிலையில், கிராமசபை கூட்டம் முடிந்த பிறகு, தேர்தல் களம் சூடுபிடிக்கும் போது “ஸ்டாலின் வருகிறார்” என்கிற இந்த பிரச்சாரம் துவங்கும் என எதிர் பார்க்கலாம், தி.மு.கவின் இந்த பிரச்சாரம் எந்த அளவிற்கு வெற்றி பெறும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.