DMK Digital Work Against on ADMK

அதிமுகவுக்கு எதிராக செய்த தில்லுமுல்லு வேலை ஆதாரத்துடன் அம்பலமாகியிருக்கிறது.

DMK Digital Work Against on ADMK : பிரதான எதிர் கட்சியான திமுக சில நாட்களுக்கு முன்பு “அதிமுகவை நிராகரிக்கிறோம்” என்ற பரப்புரையை துவங்கியது. அதில் லட்சக்கணக்கில் மக்கள் அதிமுகவை நிராகரித்துள்ளதாக திமுக கூறி வருகிறது .

திமுகவை ஆளுங்கட்சியாக மக்கள் பார்ப்பதாகவும், திமுக கூறிய பின்தான் அனைத்தையும் ஆளும் கட்சி நிறைவேற்றுவதாக ஸ்டாலின் தெரிவித்தார். அக்கட்சியின் இணையதள பிரச்சார யுக்தியாக werejectadmk என்கிற வலைத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டது.

அதில் லைவ் ட்ராக்கர் என்ற பெயரில் அதிமுகவை நிராகரித்தோர் எண்ணிக்கையும், நிராகரித்த கிராமங்கள் எண்ணிக்கையும் அந்த இணையத்தில் காண்பிக்கபடுகிறது .

அந்த வலைத்தளத்தை ஒவ்வொரு முறை புதுப்பிக்கும்போதும் (refresh செய்யும்போது ) 1 தொடங்கி 5 வரை எண்ணிக்கை ஏறிக்கொண்டே போகிறது , ஒரு நிமிடத்திற்கு 20 முதல் 40 என்ற எண்ணிக்கையில் இத்தனை நாட்களுக்கு பிறகும் எண்கள் உயர்ந்து கொண்டே தான் வருகிறது ஆனால் அதை மக்கள் எதிர்ப்பு என்று கூறிக்கொண்டு திரிகின்றனர்.

அதே போல இரவு பகல் வித்தியாசம் இல்லாமல் அதன் எண்ணிக்கை உயர்வது தான் வேடிக்கையான விஷயம். அவர்கள் உருவாக்கிய வலைத்தளத்திற்கு ஏற்றவாறு ஒரு மென்பொருளை புகுத்தி கண்துடைப்பு நாடகம் ஆடுகிறது திமுக. இதன் பின் ஐபாக் இருப்பது தெளிவாக தெரிகிறது, ஏன் என்றல், இந்த இணையதளம் பதிவு செய்யப்பட்டது பிரஷாந்த் கிஷோரின் மாநிலமான பிஹாரில், தமிழகத்தில் இருக்கும் ஒரு கட்சியின் இணையதள பிரச்சாரத்திக்கு ஏன் பிஹாரில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஒரு கேள்வியும் இங்கு எழுகிறது.

தற்காலத்தின் நவீன மென்பொருளை பயன்படுத்தி மக்களை வழக்கம் போல ஏமாற்றுகிறது திராவிட முன்னேற்ற கழகம். மக்களை ஏமாற்ற என்னென்ன வழிகள் உள்ளதோ அவைகளை அலசி ஆராய்ந்து கூற ஒரு குழு உள்ளது.

இதனால் அதிமுகவை எதிர்க்க திராணி இல்லாமல் மக்களை குறுக்குவழிகள் மூலம் ஏமாற்றி வாக்குகளை பெற துடிக்கிறது அக்கட்சி என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே “எல்லோரும் நம்முடன்” என்று திமுக செய்த இணைய வழி ஆள் சேர்ப்பு பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுபடாத காரணத்தால், திமுக இது போன்ற காரியத்தை தொடர்ந்து செய்து வருகிறது. முன்பு செய்த அந்த பிரச்சாரம் கூட வெறும் திமுக உறுப்பினர்கள் மட்டுமே பதிவு செய்தனர், அதிலும் இதே போல பல சர்ச்சைகள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.