பிரச்சாரத்தில் அதிரடி காட்டிய முதல்வர் - திமுக எடுத்த திடீர் முடிவு.!! | MK.Stalin | DMK

DMK Decision on Political Meeting : சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி பொங்கல் பரிசாக தமிழக மக்களுக்கு ரூ 2, 500 வழங்கப்படும் என்று அறிவித்தார். இதனால், அதிர்ச்சியடைந்த தி.மு.க, தனது பிரச்சாரத்தை முன்கூட்டியே தொடங்குகிறது.

வெள்ளி அன்று தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்படும் என்று அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சனிக்கிழமை சேலத்தில் தனது பிரச்சாரத்தை தொடங்கி, அ.தி.மு.க மாபெரும் வெற்றி பெரும் என்று அறிவித்தார். பின்,மக்கள் அனைவரும் மகிழும்படி பொங்கல் பரிசுத் தொகையாக ரூ 2, 500யையும் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவித்தது தி.மு..கவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதனைத் தொடர்ந்து, அவசர அவசரமாக புதிய வியூகத்தை வகுத்து கொடுக்கும்படி ஐ-பேக்கை தி.மு.க வற்புறுத்தியது. ஒரு நாள் முழுவதும் நேரம் எடுத்து கொண்ட ஐ-பேக், 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்திய அதே பழைய யுக்தியை அறிவுரையாக வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலின்போது தி.மு.க பயன்படுத்திய கிராம சபை கூட்டங்கள் மற்றும் குற்ற பத்திரிக்கை போன்ற
நிகழ்ச்சிகளை தி.மு.க தனது தேர்தல் பிரச்சாரமாக அரங்ககேற்றவுள்ளது.

முதல்வர் பிரச்சாரத்தை தொடங்கியதால், ஜனவரி இரண்டாவது வாரத்தில் தொடங்க திட்டமிட்டிருந்த ஸ்டாலினின் பிரச்சாரம் தற்போது டிசம்பர் 23ம் தேதி கிராம சபை கூட்டங்கள் என்ற பெயரில் தொடங்குகிறது. 16,000 கிராமங்களுக்கு ஸ்டாலின் பிரச்சாரத்திற்க்கு செல்கிறார்.

தி.மு.க அவசர கதியில் முன் கூட்டியே தனது பிரச்சாரத்தை தொடங்குவதால், புதிய யுக்திகள் ஏதுமின்றி ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் கடைபிடித்த பிரச்சார பாணியை மீண்டும் கையில் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.