Tasmac

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி டாஸ்மாக்கில் வழக்கம்போல் பல நூறு கோடிகள் வசூல் ஆகியுள்ளது.

ஒவ்வொரு வருடமும் தீபாவளி அன்று இத்தனை கோடி வசூல் செய்ய வேண்டும் என அரசு தரப்பில் இலக்கு வைக்கப்படும். சில வருடங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமாகவே வசூல் செய்வதுண்டு.

இந்நிலையில், இந்த் தீபாவளி விடுமுறையில் டாஸ்மாக் விற்பனையில் தமிழக அரசு சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இந்த தீபாவளிக்கு 26ம் தேதி முதல் 28ம் தேதி மொத்தம் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 25ம் தேதி முதலே டாஸ்மாக்கில் வசூல் வாரிக்குவிய துவங்கியது. 25ம் தேதி ரூ.100 கோடியும், 26ம் தேதி ரூ.183 கோடியும், தீபாவளியான 27ம் தேதி ரூ.172 கோடி என கடந்த 3 நாட்களில் டாஸ்மாக் விற்பனை ரூ.455 கோடியை தொட்டுள்ளது. கடந்த வருட தீபாவளி டாஸ்மாக் விற்பனை ரூ. 325 கோடி என்கிற நிலையில் இந்த வருடம் ரூ.455 கோடியை தொட்டு சாதனை படைத்துள்ளது.

அதாவது, கடந்த ஆண்டை விட இந்த வருடம் ரூ.130 கோடி அதிகமாக மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.