Ajith
எல்லாரும் அஜித்தை போல நடந்துக்கோங்க என விநியோகிஸ்தர் ஒருவர் பேசியுள்ளார்.

Distributor About Vivegam : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டதாக கூறி நஷ்டஈடு கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தர்பாரால் நஷ்டமடைந்த விநியோகிஸ்தர் ஒருவர் எல்லா நடிகர்களும் அஜித்தை போல நடந்து கொள்ள வேண்டும் என பேசியுள்ளார்.

விவேகம் படம் தோல்வியை தழுவியதும் அஜித் அதே தயாரிப்பாளருக்கு விஸ்வாசம் படத்தை கொடுத்தார். மேலும் விவேகம் எவ்வளவு வசூல் செய்ததே அதே தொகைக்கு விஸ்வாசம் படத்தை விற்க சொன்னார்.

அவர் கூறிய படி தான் தயாரிப்பு நிறுவனமும் நடந்து கொண்டது, படம் நல்ல வசூல் கொடுத்து விவேகத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை எல்லாம் ஈடுகட்டி லாபம் கொடுத்து விட்டது என கூறியுள்ளார்.

அஜித்தை போலவே ரஜினி உட்பட எல்லாரும் செய்ய வேண்டும் என அந்த விநியோகிஸ்தர் பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.