கொரோனா வைரஸ் கேட்டால் பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம் அடைந்திருப்பது ரசிகர்களையும் திரையுலக பிரபலங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Director Thamira Passes Away : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தொற்று தற்போது உருமாறி இந்தியாவில் இரண்டாவது அலையாக கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அரசியல் தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் பொதுமக்கள் எனப் பலரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் இறந்து வருவது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.

இப்படியான நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் கடந்த 2010ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் மற்றும் பாரதிராஜா நடிப்பில் வெளியான ரெட்டச்சுழி படத்தை இயக்கிய தாமிரா உயிரிழந்துள்ளார். இவர்தான் சமுத்திரகனி நடித்த ஆண் தேவதை என்ற படத்தையும் இயக்கியவர்.

இவர் கரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்திருப்பது திரையுலக பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.