Director Suseendhiran in Master FDFS

ஈஸ்வரன் பட இயக்குனர் சுசீந்திரன் மாஸ்டர் படத்தை பார்த்து விட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Director Suseendhiran in Master FDFS : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, என பல திரையுலக பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இன்று திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று மாஸ்டர் திரைப்படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர். மேலும் திரை உலக பிரபலங்களும் மாஸ்டர் படத்திற்காக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஈஸ்வரன் படத்தின் இயக்குனரான சுசீந்திரன் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள அருணா திரையரங்கில் first day first show பார்த்ததாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.