Director Shankar Next Movie

தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் ஹீரோவாக நடித்த நடிகரை வைத்து சங்கர் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Director Shankar Next Movie : தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். பிரம்மாண்ட படங்களாக இயக்கி வெற்றி பெற்ற இவர் தற்போது கமல்ஹாசன், காஜல் அகர்வால் ஆகியோரை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படம் தொடங்கியதிலிருந்தே தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. படம் எப்போது முடியும் எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

துருவ் விக்ரம் அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

முதல் படத்திலேயே புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என பேசும் அளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்த படத்தில் தொடங்கி இவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தன் அப்பா விக்ரமுடன் இணைந்து நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது விக்ரம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.