Rathnakumar Reviews Bigil
பிகில் படம் இரண்டாவது முறை பார்க்கிறேன் ஆனால் போர் அடிக்கவே இல்லை என கூறியுள்ளார் இயக்குனர் ரத்னகுமார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பிகில்.

ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது மேயாத மான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் அவரது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள டீவீட்டில் பிகில் படத்தை இரண்டாவது முறை பார்க்கிறேன். பொதுவாக இரண்டாவது முறை படம் பார்க்கும் போதே போர் அடித்து விடும். ஆனால் பிகில் அப்படி இல்லை. அட்லீயின் ஸ்க்ரீன் பிளே மின்னல் வேகத்தில் செல்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விஜய் சாரின் நடிப்பு பிரமாதம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.