Director Naveen Wishes to Anitha

சுமங்கலி விவகாரத்தில் அனிதா சம்பத் பேசியதற்கு பாராட்டு தெரிவித்து பிரபல இயக்குனர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Director Naveen Wishes to Anitha : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த வாரம் திங்கட்கிழமை நவராத்திரி ஸ்பெஷல் கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது சுரேஷ் சக்ரவர்த்தி யாராவது சுமங்கலி வந்து தொடங்கி வையுங்கள் என கூறினார்.

இதற்கு அனிதா சம்பத் நான் சுமங்கலி என்பதால் என்னை அழைத்தார்கள் இல்லை என்றால் என்னை ஒதுக்கி இருப்பார்கள். இது போன்ற செயல்கள் சமூகத்தில் மாற வேண்டும் என கூறினார்.

இவருடைய இந்த பேச்சுக்கு சனிக்கிழமை எபிசோடில் உலக நாயகன் கமல்ஹாசன் கைதட்டி பாராட்டினார். இந்த நிலையில் தற்போது இயக்குனர் நவீன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவில் முற்போக்கு சிந்தனை, பகுத்தறிவு, சமத்துவம் பேசும் இவர் போன்ற பெண்களே தமிழ்நாட்டின் அடையாளம் எனக்கூறி அனிதாவை பாராட்டியுள்ளார்.

இவர் தமிழில் மூடர் கூட்டம் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். தற்போது அக்னி சிறகுகள் என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.