Mahendhiran

Director Mahendhiran : பிரபல இயக்குனரும் விஜய் பட வில்லனுமான இயக்குனர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் திரையுலகை அதிர்ச்சியாக்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் முள்ளும் மலரும், உதிரி பூக்கள் மற்றும் பல தரமான படங்களை கொடுத்தவர் பிரபல இயக்குனரான மகேந்திரன். இவர் தெறி படத்திலும் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார்.

இவர் கடந்த ஒரு மாதமாகவே உடல் நல குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் தற்போது அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது ரசிகர்களை தாண்டி திரையுலக பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.