Director Kv Anand Death

இயக்குனர் கே வி ஆனந்த் அவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் அவரது உடலை நேரில் பார்க்க முடியாமல் ஆம்புலன்சின் ஜன்னல் வழியாக பார்த்து அவரது குடும்பம் கலங்கியுள்ளது.

Director Kv Anand Death : தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக வலம் வந்து பின்னர் இயக்குனராக அறிமுகமானவர் கே வி ஆனந்த். சூர்யா, ஜீவா, தனுஷ் என பல நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். தொடர்ந்து வெற்றிப் படங்களாக இயக்கி வந்த இவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் உயிரிழந்ததை அடுத்து அவருக்கு கொரானா இருப்பது தெரியவந்தது. இதனால் அவரது உடல் உறவினர்களிடம் கொடுக்காமல் நேரடியாக பெசன்ட் நகரிலுள்ள மயானத்திற்கு சென்றது. கே வி ஆனந்தின் குடும்பம் ஆம்புலன்ஸில் உள்ள அவரது உடலைப் பார்த்து கதறி அழுதுள்ளது.

இது குறித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.